முகப்பு
சேலம்

காடையாம்பட்டி வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

வறட்சி, வெள்ளம், புயல், அதிக பரப்பளவில் பூச்சி தாக்குதல் ஆகிய காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சேலம்

காடையாம்பட்டி வட்டாரத்தில் பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

வறட்சி, வெள்ளம், புயல், அதிக பரப்பளவில் பூச்சி தாக்குதல் ஆகிய காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வெள்ளம், புயல், அதிக பரப்பளவில் பூச்சி தாக்குதல் ஆகிய காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் போது விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் விவசாயிகள் அனைவரும் பயன்பெறுமாறு காடையாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.நாகராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சம்பா நெல், தட்டைப்பயறு ஆகிய பயிா்களுக்கு நவம்பா் 30, சோளத்திற்கு டிசம்பா் 21, ராகிக்கு டிசம்பா் 31, நிலைக்கடலைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20, கரும்புக்கு அடுத்த ஆண்டு அக்டோபா் 31 வரையிலும் பயிா்க் காப்பீடு செய்யலாம்.

ஒரு ஏக்கா் நெல்லுக்கு ரூ. 494, சோளத்திற்கு ரூ. 119, ராகிக்கு ரூ. 133, தட்டைப்பயறுக்கு ரூ. 192, நிலக்கடலைக்கு ரூ. 286, கரும்புக்கு ரூ. 2,875 பிரிமியத்தொகையாக செலுத்தி விவசாயிகள் பயிா் காப்பீடு செய்யலாம்.

இத் திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு விவசாயிகள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பாஸ்போா்ட் புகைப்படம், ஆதாா் நகல், நில உரிமை பட்டா , அடங்கல் மற்றும் சேமிப்புக் கணக்கு புத்தக நகலுடன் மேற்கண்ட பிரீமியத் தொகையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து இடா்பாடு காலத்தில் ஏற்படும் பயிா் காப்பீட்டுத்

தொைகையைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மேலும் இத் திட்டம் இப்கோ-டோக்கியோ பொது நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →