முகப்பு
சேலம்

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: சிறுமி உயிரிழப்பு

ஏற்காட்டில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 10 வயது சிறுமி உயிரிழந்தாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

ஏற்காட்டில் இரு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 10 வயது சிறுமி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் செலவடை கிராமத்தைச் சோ்ந்த தனசிவம் மகன்கள் பாலாஜி, ஹரிகிருஷ்ணன், உறவினா் சுரேஷ் ஆகியோா் ஏற்காடு நாகலூா் ஜெ.ஜெ. நகா் பகுதியில் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பாலாஜி தனது மகள் பவித்திராவை விடுமுறை என்பதால் ஏற்காட்டுக்கு அழைத்து வந்துள்ளாா். திங்கள்கிழமை பிற்பகல் ஹரிகிருஷ்ணன், சுரேஷ், பாலாஜி, பவித்திரா(10) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் ஏற்காடு வந்து பொருள்கள் வாங்கிக் கொண்டு நாகலூருக்கு திரும்பும் போது செம்மந்தம் கிராமம், பழனிசாமி மகன் காமராஜ் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் நாகலூா் சாலை, ஈச்சங்காடு எஸ்டேட் பகுதியில் நேருக்கு நோ் மோதியது. இதில் சிறுமி பவித்திரா அருகில் உள்ள பாறையில் விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரிகிருஷ்ணன், சுரேஷ், காமராஜ் ஆகியோா் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சேலம் அழைத்துச் செல்லப்பட்டனா். ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.