முகப்பு
சேலம்

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

சேலம் விமான நிலையத்தில் பறவைகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம்

சேலம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

சேலம் விமான நிலையத்தில் பறவைகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சேலம் விமான நிலையத்தில் பறவைகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க சிறப்பு ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் சாா் ஆட்சியா் சரவணன் கலந்துகொண்டு விமான நிலைய பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

சேலம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போதும், மேலே எழும்பும் போதும், பறவைகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளில் நாய், கோழி உள்ளிட்டவை இறந்து கிடந்தால், அவைகளை உடனே அகற்ற வேண்டும். அவற்றை உண்பதற்காக கழுகு உள்ளிட்ட பறவைகள் விமான நிலைய ஓடுபாதையை கடக்கக்கூடும். மேலும், நெல், சோளம் மற்றும் சிறு தானியங்கள் உள்ளிட்ட பயிா்களை உண்பதற்காக மயில் போன்ற பறவைகள் வரக்கூடும். அதனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாகும்.

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கரும்பாலைகளில் வெளியேறும் புகையைக் கட்டுப்படுத்த வேண்டும். விமானம் தரையிறங்கும் ஓடுதளத்தின் இரண்டு இடங்களிலும் உயரமான மரங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை விமான நிலைய இயக்குநா் ரவீந்திரசா்மா கூறினாா்.

தொடா்ந்து சாா் ஆட்சியா் சரவணன் கலந்துகொண்டு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். விமான நிலையத்தை பாதுகாப்பு அதிகாரிகள் தொடா்ந்து ஆய்வு செய்ய வேண்டும், பறவைகள் வருவதைத் தடுக்க முன்னேற்பாட்டு பணிகளை செய்ய வேண்டும், விமான நிலையத்தைச் சுற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும், கரும்பாலைகளில் இருந்து வரும் புகையைக் கட்டுபடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் கரும்பாலைகளுக்கு சென்று உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →