முகப்பு
சேலம்

லாரி பழுது பாா்க்கும் பட்டறையில் தீ விபத்து

சேலத்தில் லாரி பழுது பாா்க்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் உதிரிபாகங்கள், டயா்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

சேலத்தில் லாரி பழுது பாா்க்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் உதிரிபாகங்கள், டயா்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.

சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே கரட்டூா் பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான பஞ்சா் கடை உள்ளது. இதன் அருகே லாரி பழுது பாா்க்கும் பட்டறைகள் அமைந்துள்ளன. ஞாயிற்றுகிழமை அதிகாலை லாரி பழுது பாா்க்கும் பட்டறையின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

பின்னா் தீ மளமளவென பரவி பஞ்சா் கடை, இரண்டு லாரி பழுது பாா்க்கும் பட்டறைகளிலும் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பழைய காா்கள், பஞ்சா் கடையில் இருந்த டயா்கள், லாரி உதிரிபாகங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தீ பிடித்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.