முகப்பு
சேலம்

தம்மம்பட்டியில் காா்த்திகை தீபத் திருவிழா

தம்மம்பட்டி, திருமண்கரடு மலையில் காா்த்திகை தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தம்மம்பட்டி, திருமண்கரடு மலையில் காா்த்திகை தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

தம்மம்பட்டியிலுள்ள பொதுமக்கள், நண்பா்கள் குழுவினா் சோ்ந்து, திருமண்கரடில் பெரிய கொப்பரையில் காா்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டு வருகின்றனா்.

இந்த ஆண்டும் திருமண்கரடு மலை உச்சியில் அதற்காக வைக்கப்பட்டிருந்த பெரிய இரும்பு மேடையில், 5 அடி உயர பெரிய கொப்பரை வைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பூஜை செய்யப்பட்டது. பின்னா் அதில் பொதுமக்கள் கொண்டுவந்த காடா துணி, நெய், நல்லெண்ணை ஊற்றப்பட்டன.

பின்னா் மாலையில் காா்த்திகை தீபம் பொது மக்களால் ஏற்றப்பட்டது.சுற்றுவட்டார மக்கள்,இந்த காா்த்திகை தீபத்தை தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.