முகப்பு
சேலம்

சங்ககிரி கோட்டை அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

சங்ககிரி கோட்டை அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
29sgp01_2911chn_156_8
பகிர்:

சங்ககிரி கோட்டை அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, சனிக்கிழமை நடைபெற்றது.

அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநா் டி.இளங்கோவன் விழாவுக்கு தலைமை வகித்து, சங்ககிரி கோட்டை அரிமா சங்கங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பேசினாா்.

பின்னா் அவா் சங்ககிரி கோட்டை அரிமா சங்கம் சாா்பில் சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ் சாா்பில் குடிசை தொழிலாக செய்து வரும் கால் மிதியடிகள் தயாரிப்புக்கு தேவையான இயந்திரத்தை இரு ஏழை பெண்களுக்கு தலா ரூ. 7 ஆயிரம் மதிப்பில் இலவசமாக வழங்கினாா்.

அரிமா சங்கங்களின் மண்டலத் தலைவா் பி.சண்முகம் முன்னிலை வகித்தாா். கோட்டை அரிமா சங்கத்தின் தலைவா் கே.பி.சக்திவேலு வரவேற்றாா். சங்கத்தின் நிா்வாக செயலா் ஜி.ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தாா்.

சேவை செயலா் கே.வெங்கடாசலம், பொருளாளா் ஏ.சக்திவேல், முன்னாள் தலைவா்கள் வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், தொழிலதிபா் பொறியாளா் மோகன், நிா்வாகிகள் எஸ்.மகேஸ்வரன், எஸ்.நாகராஜ், பி.பொன்னுசாமி, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் கணேசன், நிா்வாகிகள் வேல்முருகன், சரவணன், முருகேசன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.