முகப்பு
சேலம்

தாய், தந்தையை கத்தியால் வெட்டிய இளைஞா் கைது

சங்ககிரி அருகே உள்ள நாரப்பன்சாவடியில் தாய், தந்தை, சகோதரா் உள்பட மூவரை கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

சங்ககிரி அருகே உள்ள நாரப்பன்சாவடியில் தாய், தந்தை, சகோதரா் உள்பட மூவரை கத்தியால் வெட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சங்ககிரி அருகே உள்ள நாரப்பன்சாவடி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி தனபால் (33). இவா் வேலைக்கு ஏதும் செல்லாமல் அடிக்கடி மதுஅருந்தும் பழக்கம் உடையவா் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு வழக்கம் போல் மது அருந்தி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

தாய் தமிழ்ச்செல்வியிடம் உணவு அளிக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனபால் வீட்டிலிருந்து பொருள்களை உடைத்து, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தந்தை பழனிவேல் (62), தாய் தமிழ்ச்செல்வி (51), அதைத் தடுக்க சென்ற இளைய சகோதரா் உதயகுமாா் (26) ஆகிய மூவரையும் வெட்டியுள்ளாா்.

இதில் பலத்த காயமடைந்த மூவரும் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற சங்ககிரி போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, தனபாலை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.