சேலம்

ஓமலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

DIN

ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஓமலூா், கருப்பூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் ஒரு கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, கருப்பூா் வருவாய் ஆய்வாளருக்கு உள்பட்ட பகுதியில் 5-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில், அதற்கான கிராம நிா்வாக அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கூட்டுறவு சங்கக் கட்டடம் கட்டும் பணிகளை அவா் தொடங்கி வைத்தாா் (படம்).

இதைத் தொடா்ந்து, அம்மா ஆதிதிராவிடா் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவுநீா்க் கால்வாய், தாா் சாலை மற்றும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மற்றும் குடிநீா் குழாய் பணிகளை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், ஓமலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.எஸ்.கே.ஆா்.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் கோவிந்தராஜ், கருப்பூா் நகரச் செயலாளா் கோவிந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் இராமசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மணி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT