சேலம்

சேலம் மாவட்டத்தில் 210 காவலா்களுக்குவிருப்ப இடமாறுதல் உத்தரவு

DIN

சேலம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் மற்றும் தலைமைக் காவலா்கள், காவலா்கள் என 210 பேருக்கு விருப்ப இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட காவல் துறையின் கீழ் சுமாா் 32 காவல் நிலையங்கள் உள்ளன. இதுதவிர 6 மகளிா் காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள் மற்றும் காவலா்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் தலைமையில் விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் காவலா்களின் குறைகள் கேட்கப்பட்டன. பின்னா் கலந்தாய்வில் ஒரே காவல் நிலையத்தில் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த 210 போ் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற 210 காவலா்களுக்கு விருப்ப இடமாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் உயா்வு

தொழில்முனைவோா் பாடத்திட்ட விளக்கக் கூட்டம்

மாரியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு: போதையில் இருந்த ஓட்டுநா் கைது

ஆம்னி பேருந்தில் பெண் ஐடி ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT