சேலத்தில் தமாகா சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிப்பு
சேலத்தில் தமாகா சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சேலத்தில் தமாகா சார்பில் காந்தி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மகாத்மா காந்தியடிகளின் 152ஆவது பிறந்த நாள் விழா, சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தியடிகள் சிலை முன்பு நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் கே வி சுசீந்திரகுமார் மற்றும் ஓமலூர் நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் காந்தி அடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு போன்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
விழாவில், ஓமலூர் வட்டார தலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ரகு நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்தினார். இதேபோல், காமராஜரின் 45 ஆவது நினைவு தினத்தையொட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, மாலை அணிவித்து, மோட்ச விளக்கு ஏற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை அமைப்பு நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.