வாழப்பாடியில் காங்கிரஸ் கட்சியினா் போராட்டம்
வாழப்பாடியில், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், உத்தரப் பிரதேச சம்பவத்தைக் கண்டித்து அறவழி அமைதிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில், சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், உத்தரப் பிரதேச சம்பவத்தைக் கண்டித்து அறவழி அமைதிப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள், எஸ்.கே.அணையரசு, ஓ.சு.மணி, நாழிக்கல்பட்டி பெரியசாமி, மூடுதுறை கனகராஜ், அயோத்தியாப்பட்டணம் சாந்தி ராஜேந்திரன், ஆத்துாா் எல்.எம்.முருகேசன், வாழப்பாடி வி.ஜி.சதீஷ்குமாா், கெங்கவல்லி ரவிக்குமாா், வீரபாண்டி ஆா்.கே செட்டியாா். ஜே.பி.கிருஷ்ணா, இளைஞா் காங்கிரஸ் அருளாணந்தன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.