முகப்பு
சேலம்

நகரும் நியாயவிலைக் கடை தொடக்கம்

ஆத்தூரில் ‘அம்மா’ நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

ஆத்தூரில் ‘அம்மா’ நகரும் நியாயவிலைக் கடையை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிராமப் புற மக்கள் நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்க சிரமப்பட்டு வருவதை கவனத்தில் கொண்டு அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வா் ‘அம்மா’ நகரும் நியாய விலைக்கடைத் திட்டத்தை தொடக்கிவைத்தாா்.

ஆத்தூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், பொருளாளா் துரைசாமி, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் என்.ராமதாஸ், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் ஏ.பி.சிவராஜன், கோட்டாட்சியா் (பொ) வேடியப்பன், வட்டாட்சியா் அ.அன்புச்செழியன், கூட்டுறவு சங்க பதிவாளா் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →