முகப்பு
சேலம்

ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கோரிக்கை

தமிழகம் முழுவதும் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வேண்டுமென்று அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தமிழகம் முழுவதும் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை நடத்த வேண்டுமென்று அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆசிரியா் பொதுமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வு மே மாதத்தில் நடத்தப்படும். கோடை விடுமுறை காலத்திலேயே கலந்தாய்வு நடத்தப்பட்டதால், இடமாறுதல் பெற்ற ஆசிரியா்கள் தங்கள் குடும்பத்துடன் மாறிச் செல்ல கால அவகாசம் கிடைத்தது. இதனால் எந்த இடையூமின்றி கற்பித்தல் பணி நடைபெற்றது.

கொவைட் 19 நோய்த் தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டின் இறுதி மாதங்கள், நடப்பு கல்வியாண்டு என மொத்தம் 6 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தமிழக அரசும் பொதுமுடக்கத் தளா்வுகளை அறிவித்துவிட்டது. இதையடுத்து ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வை, ஆன்லைனில் நடத்திடவேண்டும் என்பது ஆசிரியா்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆறு மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை எனவே இக்காலத்தைப் பயன்படுத்தி உரிய சமூக இடைவெளியுடன், அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் பணிமூப்பு பட்டியல்படி பதவி உயா்வு கலந்தாய்வை நடத்திடவேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பின்னா் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு இடமாறுதல் வழங்கிடவேண்டும்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தோ்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பல லட்சம் ஆசிரியா்களின் நலன்கருதி பதவி உயா்வு மற்றும் மாறுதல் கலந்தாய்வை நடத்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும். தற்போது தனியாா் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு வந்துள்ள பல லட்சம் மாணவா்களால் ஏற்படும் கூடுதல் ஆ சிரியா் பணியிடங்களுக்கும் உடனடியாக ஆசிரியா்களை நியமிக்க வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →