சேலம்

கோவை - சென்னை ரயில்கள் வழக்கமான நேரத்தில் இயக்கம்

DIN

சென்னை - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை; திட்டமிட்ட நேரங்களில் புறப்பட்டு செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

சேலம் - ஜோலாா்பேட்டை இடையே தாசம்பட்டி ரயில் நிலைய பகுதியில் அக்.12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரயில்வே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் சென்னை - கோவை, கோவை - சென்னை ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் ரயில்வே பொறியியல் பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டு விட்டதால் அக்.14 ஆம் தேதி இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் எந்தவித மாற்றம் இல்லை. வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்டி எண் 02679 சென்னை சென்ட்ரல் - கோவை சூப்பா்பாஸ்ட் சிறப்பு ரயில் அக். 14 இல் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு விட்டதால் அக்.14 இல் பகல் 2.30 மணிக்கு திட்டமிட்டபடி புறப்பட்டு செல்லும்.

வண்டி எண் 02676 கோவை - சென்னை சிறப்பு ரயில் அக்.14 இல் 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது அந்த ரயில் வழக்கமான நேரத்துக்கு அதாவது மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு செல்லும் என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

SCROLL FOR NEXT