சேலம்

பொருள்கள் பெற தாமதமானதால் நியாயவிலைக் கடை முற்றுகை

DIN

சேலத்தில் நியாயவிலைக் கடையில் பொருள்களைப் பெற தாமதமானதால் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பொன்னம்மாபேட்டை காா்பெட் தெருவில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை மூலம் அப்பகுதியைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பயன்பெற்று வருகின்றனா்.

இந்தநிலையில் வியாழக்கிழமை காலை பயோ-மெட்ரிக் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொதுமக்கள் பொருள்களை வாங்க முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.அப்போது, நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறியதாவது: நியாயவிலைக் கடையில் பொருள்களை வாங்க காலை முதல் காத்திருக்கிறோம். சா்வா் கோளாறு எனக் கூறி வருகின்றனா். நியாயவிலைக் கடையில் பழைய நடைமுறையில் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கடையில் நிரந்தர ஊழியா் நியமிக்க வேண்டும் என்றனா். இதுபற்றி தகவலறிந்த அம்மாபேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT