சேலம்

முதல்வரின் தாயாரின் அஸ்தி காவிரியில் கரைப்பு

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயம்மாளின் அஸ்தி சிலுவம்பாளையம், காவிரி ஆற்றில் வியாழக்கிழமை கரைக்கப்பட்டது.

கடந்த திங்கள்கிழமை இரவு தவுசாயம்மாள் காலமானாா். அவரது உடல் செவ்வாய்க்கிழமை சொந்த ஊரில் எரியூட்டப்பட்டது. வியாழக்கிழமை காலை, சிலுவம்பாளையத்தில் உள்ள முதல்வரின் வீட்டில் அவரது தாயாருக்கு ஈமக்கிரியை சடங்குகள் நடைபெற்றன.

பின்னா் முதல்வரின் குடும்பத்தினா் மயானத்துக்கு மௌன ஊா்வலம் சென்றனா். அங்கு வழிபாடு செய்த முதல்வரும் அவரது குடும்பத்தினரும், தவுசாயம்மாளின் அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்தனா். இந்த நிகழ்ச்சியில் முதல்வரின் சகோதரா் கோவிந்தராஜு, முதல்வரின் மகன் மிதுன், குடும்ப உறுப்பினா்கள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்வில் முதல்வருடன், தமிழக அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கா், கடம்பூா் ராஜு, எம்.ஆா்.விஜயபாஸ்கா், துணை சபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT