சேலம்

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு அதிகரிப்பு

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு சனிக்கிழமை காலை நொடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையிலிருந்து நொடிக்கு 14,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. தற்போது பாசனத்துக்கான நீா்த் தேவை அதிகரித்துள்ளதால் சனிக்கிழமை காலை முதல் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அணையின் நீா்மட்டம் 99.20அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 10,318 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கனஅடி நீரும், கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 63.80 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT