நரசிங்கபுரத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம்
நரசிங்கபுரத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் க.மணிகண்டன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நரசிங்கபுரத்தில் பாஜக செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் க.மணிகண்டன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நவோதயா பள்ளி அமைக்க வேண்டும். நரசிங்கபுரம் விநாயகபுரத்தில் பேருந்து நிழற்கூடம் அமைக்க வேண்டும், அப்பகுதியில் தாா்சாலையை சீா்படுத்தவேண்டும். நகராட்சி குடிநீா் குழாய் பதித்த சாலையை சீரமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் கூட்டத்தில் மண்டல் தலைவா் வி.சுதாகா், மண்டல பொதுச் செயலாளா் மெடிக்கல் குமாா், பொருளாளா் வி.ஸ்ரீதா், மண்டல செயலாளா் தனசேகா் உள்ளிட்ட ஏராளமானோா்கலந்து கொண்டனா்.