சேலம்

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

சங்ககிரி அருகே உள்ள குப்பனூரில் லாரி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடி சென்றனா்.

DIN

சங்ககிரி அருகே உள்ள குப்பனூரில் லாரி உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடி சென்றனா்.

சங்ககிரி அருகே உள்ள குப்பனூா், முனிய கோனாா் காடு பகுதியைச் சோ்ந்த லாரி உரிமையாளா் சுப்பிரமணி மகன் அசோகன். இவரும், அவரது மனைவியும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதிய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது பழைய வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்துள்ளனா்.

அதில் அவா்களது பழைய வீட்டிலிருந்து அடையாளம் தெரியாத இருவா் ஓடிச் சென்றுள்ளனா். பின்னா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT