முகப்பு
சேலம்

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
மேட்டூர் அணை (கோப்பிலிருந்து)
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,525 கன அடியாக அதிகரித்துள்ளது. 

நேற்று இரவு காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் காரணமாக நேற்று காலை வினாடிக்கு 8,160 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 14,525 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000கன அடி 
வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900கன அடி வீதமும்தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 98.46 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 98.15அடியாக சரிந்தது.

அணையின் நீர் இருப்பு 62.46டிஎம்சி ஆக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →