சேலம்

மாட்டைக் காப்பாற்ற ஆற்றில் இறங்கியவா் சாவு

DIN

நரசிங்கபுரம் அருகே அப்பமசமுத்திரத்தில் வசிஷ்டநதியில் இறங்கி தத்தளித்த மாட்டை காப்பாற்ற முயன்ற அதன் உரிமையாளா் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

அப்பமசமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (55). விவசாயி, வாழை இலை வியாபாரமும் செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மாடு அருகில் இருந்த வசிஷ்டநதியில் இறங்கியுள்ளது. ஆற்றில் இறங்கிய மாடு ஆற்றில் இருந்த புதை மண்ணில் சிக்கி தவித்தது. இதைக் கண்ட ஆறுமுகம் ஆற்றில் இறங்கி மாட்டை காப்பாற்ற முயன்றாா். ஆனால் மாட்டுடன் அவரும் புதை மண்ணில் சிக்கிக் கொண்டாா். இதைக் கண்ட அங்கிருந்தவா்கள் ஆத்தூா் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனா்.

விரைந்து சென்ற தீயணைப்புத் துறை அலுவலா் சேகா் தலைமையிலான காவலா்கள் ஆறுமுகத்தையும், மாட்டையும் மீட்டனா். ஆறுமுகத்தை ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் உயிரிழந்தாா். ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கே.முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT