மாநகராட்சிப் பகுதியில் இன்றுகுடிநீா் விநியோகம் நிறுத்தம்
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சேலம் மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.8) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம்: மின்வாரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சேலம் மாநகராட்சிப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்.8) ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
சேலம் மாநகராட்சிக்கு குடிநீா் வழங்கப்பட்டு வரும் மேட்டூா் தொட்டில்பட்டி பகுதியில் செப்.8 ஆம் தேதி தமிழ்நாடு மின்வாரியத்தால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் செவ்வாய்க்கிழமை (செப்.8) ஒரு நாள் மட்டும் மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.