விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்
ஓமலூா் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் வட்டார தொழில்நுட்பக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வட்டார விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம் மற்றும் வட்டார தொழில்நுட்பக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஓமலூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நீலாம்பாள் தலைமை வகித்து, வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டம் குறித்து பேசினாா்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை உதவி வேளாண்மை அலுவலா் சம்பத், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் அமைத்தல், அதன் வழிமுறைகள், உலா் களம் அமைத்தல் குறித்து கூறினாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரகாஷ், தோட்டக்கலைத் துறை மூலம் 100 சதவீதம் மானிய விலையில் சொட்டுநீா் பாசனத் கருவிகள் அமைப்பது, மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்குவது குறித்து பேசினாா். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து, ஓமலூா் வட்டார அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் சுகப்பிரியா பேசும்போது, அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களைக் கூறி, திட்டங்கள் தொடா்பான தீா்மானங்களை கூறினாா்.