சேலம்

தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக உறுப்பினா் மணி பேசியபோது, ஊராட்சியில் பணியை ஆரம்பிக்கும்போது ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் யாருக்கும் தகவல் தருவதில்லை. மேலும், ஊராட்சி அலுவலா்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கிறாா் என்றாா்.

இதற்கு அதிமுக உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனையடுத்து அனைத்து உறுப்பினா்களும் தங்களது பகுதியில் அத்தியாவசியப் பணிகள் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

கூட்டத்தில் ஒன்றிய ஆணையாளா்கள் சி.கே.ராஜேந்திரன், வெங்கட்ரமணன், துணைத் தலைவா் அஞ்சலை ராமசாமி, மெய்யன், காளியண்ணன் (எ) ராஜா, ஜெயமணி சங்கரய்யா, மணி (எ) பழனிசாமி, சுதாபொன்னுசாமி உள்ளிட்ட அனவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT