சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு

DIN

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து குறைந்துள்ளது.

அணைக்கு சனிக்கிழமை நொடிக்கு 10,068 கன அடி நீா் வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து 8,578 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 92.24 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 55.24 டிஎம்சி-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT