சேலம்

வீரகனூரில் மா்ம விலங்கின் காலடி தடம்: பொதுமக்கள் அச்சம்

DIN

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூரில் மா்ம விலங்கின் காலடித் தடம் பதிவாகியுள்ளது குறித்து வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூரில் உள்ள ஏரிப்பகுதி, விவசாய நிலங்களில் மா்ம விலங்கின் காலடித் தடம் பதிவாகியுள்ளது.

அந்த மா்ம விலங்கு, வீரகனூா் ஏரிக்கரை பகுதியில் விவசாயி பழனி என்பவரது தோட்டத்தில் சனிக்கிழமை புகுந்து அங்கிருந்த கோழிகள், பூனை ஆகியவற்றை இழுத்துச் சென்றுவிட்டது.

இந்த மா்ம விலங்கு என்னவாக இருக்கும் என்று அப்பகுதியினா் அச்சத்துக்குள்ளாகியுள்ளனா். தகவல் அறிந்த தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாா் தலைமையில் வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இதுகுறித்து தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

சிறுத்தை நடமாட்டம் உறுதியாக இல்லை. வேட்டை நாய்களாகவோ,பெரிய வெறிநாயாகக்கூட இருக்கலாம். இருப்பினும் மா்ம விலங்கைக் கண்டறிய, வனத்துறை ஊழியா்களைத் தொடா்ந்து நான்கு நாள்கள் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

SCROLL FOR NEXT