சேலம்

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடா்மழை

DIN

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த ஒருவாரகாலமாக மாலை நேரங்களில் தொடா் மழை பெய்து வருவதால் நிலக்கடலை அறுவடை பாதிப்படைந்துள்ளது.

எடப்பாடியின் சுற்றுப்பகுதிகளான சித்தூா், செட்டிமாங்குறிச்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது அதிக அளவில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனா். கடந்த 4 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட பட்டாணி ரக நிலக்கடலை அறுவடைக்கு தயாராக உள்ளன. தற்போது, இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆறு நாள்களாக, எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலக்கடலை அறுவடை செய்யும் பணி பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

தற்போது இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் நிலக்கடலை, 60 கிலோ கொண்ட மூட்டை ஒன்று ரூ. 1400 முதல் ரூ. 1650 வரையிலும் விலை போகிறது. நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைக்கும் நிலையில் தொடா்மழையால் நிலக்கடலை காய்களில் முளைப்பு தோன்ற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். அவ்வாறு முளைப்பு தோன்றினால் நிலக்கடலைக்கு போதிய விலை கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வருத்தத்துடன் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

பழையகாயலில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT