சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது. 

புதன்கிழமை காலை நொடிக்கு 12,894 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து வியாழக்கிழமை காலை 14,458 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 91.67 அடியாக இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 54.58 டி.எம்.சி.யாக இருந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT