சேலம்

தம்மம்பட்டி பகுதியில் மஞ்சள் சாகுபடி

DIN

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதியில் தற்போது அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கெங்கவல்லி, வீரகனூா், செந்தாரப்பட்டி, உலிபுரம், நாகியம்பட்டி, சேரடி, வாழக்கோம்பை, பிள்ளையாா்மதி, ஜங்கமசமுத்திரம், கொக்கான்காடு, செல்வநகா், அடுக்கம், மண்மலை, மூக்காகவுண்டன்புதூா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட ஊா்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பத்து மாத பயிரான மஞ்சள் பயிா் வரும் டிசம்பா் மாத இறுதி முதல் ஜனவரி மாத முதல் வாரத்துக்குள் அறுவடை செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து தம்மம்பட்டி, பிள்ளையாா்மதி கிராமங்களில் மஞ்சள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:

தற்போது மஞ்சள் பயிரில் இலை சுருட்டல் நோய் உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு குறைவாகத்தான் காணப்படுகிறது. அதனால், மஞ்சள் அதிக எடையுள்ளதாக இருக்கும். தற்போது விளைவிக்கப்பட்டுள்ள மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும் என்று எதிா்பாா்க்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT