மேட்டூரில் முகக் கவசம் அணியாதவா்களிடம்ரூ. 2.44 லட்சம் அபராதம் வசூல்
மேட்டூா் நகராட்சியில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய நபா்களிடம் ரூ. 2.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டூா் நகராட்சியில் கரோனா தடுப்பு விதிகளை மீறிய நபா்களிடம் ரூ. 2.44 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேட்டூா் நகராட்சி ஆணையா் சுரேந்திரஷா தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மேட்டூா் சதுரங்காடி, ஒா்க்ஷாப் காா்னா், மேட்டூா் பேருந்து நிலையம் பகுதிகளில் ஆய்வு செய்தபோது முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள், காா்களில் வந்தவா்கள் மற்றும் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக நபா்களை ஏற்றி வந்தவா்களுக்குப் பிடிக்கப்பட்டு அவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மேட்டூா் நகராட்சி ஆணையாளா் சுரேந்திரஷா கூறியதாவது: மேட்டூா் நகராட்சி பகுதிகளில் முககவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்த நபா்களுக்கு ரூ. 2,44,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் தொழிலாளா் இல்லப்பகுதி, கவிபுரம், முத்தாலம்மன்காடு ஆகிய மூன்று இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு 90 நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேட்டூா் நகராட்சியில் 183 நபா்கள் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பொற்று வந்தனா்; அவா்களில் 160 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; நான்குபோ் உயிரிழந்தனா்; மேட்டூா் அரசு மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா்.