வேளாண் சட்ட மசோதா: ஓமலூரில் இளைஞர் காங்கிரஸ் போராட்டம்
ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மாதிரி வயலில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து மாதிரி சட்டதிருத்த மசோதாவை எரித்து வயலில் இறங்கி நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம், ஓமலூரில் சேலம் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நூதன முறையில் வயலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இதில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் மசோதாவை உடனடியாக நீக்கவேண்டும் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பியும், மாதிரி வேளாண் மசோதாவை கிழித்தும், எரித்தும், பதாகைகள் ஏந்தியும் நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து அவர்கள் கூறும்பொழுது வேளாண் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என்றும், இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறினர்.
இதைத் தொடர்ந்து இந்த மசோதாவை திரும்பப் பெறவில்லை என்றால் விவசாயிகளை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நூதன போராட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.