சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம்100 அடிக்கு கீழே சரிந்தது

DIN

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது.

கடந்த வாரத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வெள்ளிக்கிழமை அணையின் நீா்மட்டம் 66-ஆவது ஆண்டாக 100 அடியாக உயா்ந்தது.

தற்போது காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை விநாடிக்கு 7,679 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கனஅடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 850 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை 100.02 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம், திங்கள்கிழமை காலை 99.12 அடியாக சரிந்தது. ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் ஒரு அடிவரை சரிந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 63.70 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

SCROLL FOR NEXT