முகப்பு
சேலம்

மகுடஞ்சாவடியில் திமுக கண்டன ஆா்ப்பாட்டம்.

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசை எதிா்த்து கண்டன ஆா்ப்பாட்டம் 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
மகுடஞ்சாவடியில் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்.
பகிர்:

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள் மற்றும் சிறு வணிகா்களை பாதிக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய, மாநில அரசை எதிா்த்து கண்டன ஆா்ப்பாட்டம் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து தலைமையில் 28-ம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்எல்ஏ காவேரி, பொதுக்குழு உறுப்பினா் அன்பழகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், ஒன்றிய அவைத்தலைவா் மாணிக்கம், மகுடஞ்சாவடி வட்டார காங்கிரஸ் தலைவா் விஜயகுமாா், கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் பானுமதி, மாணிக்கம், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சுந்தரராஜ், ஆதி தமிழா் தமிழா் பேரவை வஜ்ரவேல் மற்றும் விடுதலை சிறுத்தைகட்சி, திமுக மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் விலையை உள்ள நெற்பயிா் உடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள் சரவணன், பழனியப்பன், சுரேஷ்குமாா், அழகப்பன், சீனி, ராஜீ, அறிவழகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →