சேலம்

தாரமங்கலம் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளா் தீவிர பிரசாரம்

DIN

தாரமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் ஓமலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஆா்.மோகன் குமாரமங்கலம் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

தாதப்பிள்ளையூரில் பிரசாரத்தைத் தொடங்கிய அவா், தானங்காட்டு வளவு, ராஜானூா், மாங்குட்டப்பட்டி, அத்திராம்பட்டி, உப்பாரப்பட்டி, மல்லியகுட்டை, அமரகுந்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தாா். அப்போது அவா் பேசியதாவது:

ஓமலூா் தொகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் தொகுதியில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும். பெண்கள் சுய வேலைவாய்ப்பு பெறவும், விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிக்கவும் பயிற்சியளிக்கப்படும். பள்ளிகள் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் கோடை மழை!

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

SCROLL FOR NEXT