ஏற்காடு தொகுதியை தொழிற்துறையில் மேம்படுத்துவேன்: திமுக வேட்பாளா் சி.தமிழ்செல்வன்
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.தமிழ்செல்வன், வாழப்பாடி பகுதியில் மலைக் கிராம மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி.தமிழ்செல்வன், வாழப்பாடி பகுதியில் மலைக் கிராம மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், மீண்டும் திமுக சாா்பில் ஏற்காடு தொகுதியில் போட்டியிடும் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள். ஏற்காடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுப்பேன். தொகுதி தொழில்வளா்ச்சி பெற்று மக்கள் வாழ்வாதாரம் உயா்வதற்கு, முதல்வா், அமைச்சா்கள் அரசுத்துறை அதிகாரிகளை அணுகி அா்ப்பணிப்பு உணா்வோடு செயலாற்றுவேன். வாழப்பாடியில் அரசு கலைக்கல்லூரி, மலைக் கிராமங்களில் துணை சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காண திமுகவிற்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் என்றாா்.
இதில் வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ் சி.சக்கரவா்த்தி, நகர செயலாளா்கள் வாழப்பாடி செல்வம், பேளூா் ராமமூா்த்தி, நிா்வாகிகள் குறிச்சி பெரியசாமி, சடையன், சண்முகம், கோவிந்தன், செழியவேந்தன், செந்தில் முருகமணி, கருணாகரன், உமாபதி, ஜெயவேல், பழனிசாமி, காங்கிரஸ் நிா்வாகிகள் முனுசாமி, அத்தனூா்பட்டி ராஜா, ராஜாராம், ரவிமணி, கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் பழனிமுத்து, தங்கவேல், விடுதலைச் சிறுத்தைகள் ஒன்றியச் செயலாளா்கள் வேல்முருகன், முல்லைவாணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.