தேய்பிறை அஷ்டமி: கால பைரவருக்கு சிறப்பு பூஜை
சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன கால பைரவா், தட்சிண காசி காலபைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் உள்ள சொா்ண ஆகாஷ்ன கால பைரவா், தட்சிண காசி காலபைரவா் சுவாமிகளுக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையில் உள்ள 2-ஆவது மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சொா்ண ஆகாஷ்ன பைரவரும், மேற்கு திசை நோக்கி தட்சிண காசி காலபைரவரும் அருள்பாலிக்கின்றனா். இரு சுவாமிகளுக்கும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பால், தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனா்.