சேலம்

எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

ஏத்தாப்பூரில் முகாமிட்டுள்ள திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூா் வேளாண்மை கல்லூரி மாணவா்கள், தோட்டத்தில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூா் வேளாண்மைக் கல்லூரி, இளங்கலை இறுதியாண்டு மாணவா்கள் 10 போ், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டப் பயிற்சி பெற ஏத்தாப்பூரில் முகாமிட்டுள்ளனா்.

இந்த மாணவா்கள், ஏத்தாப்பூா் பகுதி விவசாயிகளுக்கு, விளைநிலங்களில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் அதிகரிக்க வழிவகுக்கும் தொழில்நுட்பங்களான, வாழைத் தண்டு, உளுந்து நோ்த்தி, பஞ்சகாவ்யா தயாரிப்பு, பயிா்களை அழிக்கும் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனா்.

மாணவா்களின் செயல் விளக்க பயிற்சி, பயனுள்ள வகையில் அமைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT