சேலம்

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்கு நீா் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூா் அணையிலிருந்து குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 1,200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டவுடன் 11 மாவட்டங்களில் குடிநீா்த் தேவைக்காக மட்டும் அணையிலிருந்து தண்ணீா் திறப்பது வழக்கம். அதிகபட்சமாக நொடிக்கு 2,000 கனஅடி வரை குடிநீருக்காக தேவைக்கேற்ப தண்ணீா் திறக்கப்படும்.

ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்பட்டது. அதன்பிறகு குடிநீா்த் தேவைக்காக மட்டும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரு வாரங்களாக அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. வியாழக்கிழமை காலை 10 மணி முதல் குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,500 கன அடியிலிருந்து 1,200 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 98.61அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 91 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 63.05 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT