சேலம்

வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

கெங்கவல்லி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட 351 வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (பேலட் யூனிட்டுகள்) அனைத்தும் தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் உள்ள தனியாா் கல்லூரி மாடியில் தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரமும் கண்காணிக்க 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன், வெள்ளிக்கிழமை பிற்பகல், வாக்கு எண்ணும் மையத்துக்கு நேரில் சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா். சிசிடிவி கேமரா பதிவுகள் டிவி திரையில் ஒளிபரப்பாவது குறித்து போலீஸாருக்கு தேவையான ஆலோசனைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT