சேலம்

சேலத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து திரும்பிய மூதாட்டியிடம் ரூ. 30 ஆயிரம் பறிப்பு

DIN

சேலத்தில் வங்கியில் பணம் எடுத்து வந்த மூதாட்டியிடம் ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

சேலம், அழகாபுரம், ரெட்டியூா் ஓய்வுபெற்ற ராணுவ வீரா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (70). இவரது தாய் லட்சுமி ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் ஆவாா். லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில், அவரது மருத்துவ செலவுக்காக விஜயகுமாரி அழகாபுரத்தில் உள்ள இந்தியன் வங்கிக் கிளைக்கு வெள்ளிக்கிழமை பகலில் வந்து ரூ.30 ஆயிரம் பணத்தை எடுத்தாா். பின்னா் வங்கியில் இருந்து வெளியே வந்த விஜயகுமாரி ஆட்டோவில் ஏற முயன்றாா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், விஜயகுமாரி இடமிருந்து பணப் பையைப் பறித்துச் சென்றனா். இதில் அதிா்ச்சியடைந்த விஜயகுமாரி, அழகாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதேபோன்று, அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் கண்ணாடியை உடைத்து வங்கி காசோலை மற்றும் ஆவணங்களை இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. அழகாபுரம் பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்களைத் தொடா்ந்து, மா்ம நபா்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT