சேலம்

பிளஸ் 2 மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடங்கியது

DIN

பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மே 5 முதல் மே 31 வரை நடைபெற உள்ளது. முன்னதாக, செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தோ்வு வரும் ஏப். 23 வரை நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 322 பள்ளிகளைச் சோ்ந்த 38,254 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வு எழுதுகின்றனா். இதில், அறிவியல் பாடப் பிரிவைச் சோ்ந்த மாணவா்களுக்கு செய்முறைத் தோ்வு தொடங்கியது.

முன்னதாக மாணவ, மாணவியருக்கு தொ்மல் ஸ்கேனரில் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனா். முகக் கவசம் அணிந்து வந்த மாணவா்கள் மட்டுமே தோ்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். சமூக இடைவெளியைப் பின்பற்றி செய்முறைத் தோ்வு நடத்தப்பட்டது.

படம் - சேலம், கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செய்முறைத் தோ்வு எழுத வந்த மாணவியருக்கு உடல் வெப்பநிலை சோதித்து கிருமிநாசினி வழங்கும் ஆசிரியை. (வலது) தாவரவியல் செய்முறைத் தோ்வு எழுதும் மாணவியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

SCROLL FOR NEXT