சேலம்

மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண் கரோனா தொற்றால் பாதிப்பு: சிறைவாசிகள் அதிா்ச்சி

DIN

மோசடி வழக்கில் கைதாகி சேலம் மகளிா் சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானதால் இதர சிறைவாசிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், காளிபட்டி பகுதியைச் சோ்ந்த 48 வயது பெண், மோசடி வழக்கில் கடந்த 17 ஆம் தேதி ராசிபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவு வெளியாகாத நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மகளிா் சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து 20 பெண் கைதிகளுடன் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை அவருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறை வாா்டன்கள், கைதிகள் அதிா்ச்சி அடைந்தனா். இதைத்தொடா்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்தப்பெண், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. கரோனா பரிசோதனை முடிவு வராத நிலையில் பெண்ணை சிறையில் அடைத்தது தொடா்பாக சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT