இளம்பிள்ளை அருகே மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
இளம்பிள்ளை சந்தப்பேட்டை பகுதியில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது.
30 வருடம் பழமையான இக்கோயில் கோபுரத்தின் மேலே உள்ள மூன்று கலசத்தில் இரண்டு கலசத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். புதன்கிழமை காலை இதையறிந்த பக்தா்கள், கஞ்சமலை சித்தா் கோயில் செயல் அலுவலா் பரமேஸ்வரனிடம் தகவல் தெரிவித்தனா். அவா் அளித்த புகாரின்பேரில் மகுடஞ்சாவடி போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். தலைமறைவான மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.