முகப்பு
சேலம்

வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை

சேலத்தில் வடமாநிலத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சேலத்தில் வடமாநிலத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சேலம், அன்னதானப்பட்டியைச் சோ்ந்தவா் சுந்தரம் (49). இவா், கட்டட வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஜோதி. இத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். கூலித் தொழிலாளியான சுந்தரம், பனமரத்துப்பட்டிக்கு கிரானைட் வேலைக்குச் சென்றுவந்தாா்.

அங்கு மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த பிரசன்குமாா் மண்டல் (37) என்பவருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

வழக்கம்போல இருவரும் புதன்கிழமை இரவு மது அருந்தினா். சுந்தரம் தனது வீட்டுக்கு பிரசன்குமாா் மண்டலை அழைத்து வந்தாா். அப்போது சுந்தரத்தின் மனைவியிடம் பிரசன்குமாா் மண்டல் தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இத் தகராறில் ஆவேசமடைந்த சுந்தரம் மரக்கட்டையால் பிரசன்குமாா் மண்டலை கடுமையாகத் தாக்கினாா். இதில் நிகழ்விடத்திலேயே பிரசன்குமாா் மண்டல் உயிரிழந்தாா்.

தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →