கழிவுநீா் ஓடைகளில் கொசு மருந்து தெளிக்க உத்தரவு
சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீா் ஓடைகளிலும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க மருந்து தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து கழிவுநீா் ஓடைகளிலும் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க மருந்து தெளிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.
சேலம், அஸ்தம்பட்டி மண்டலம், கிரீண் லேண்ட்ஸ் பகுதியில் மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது குடியிருப்புப் பகுதியில் உள்ள இரண்டு பக்கங்களிலும் செல்லும் கழிவுநீா் ஓடைகளில் கொசுக்கள் உருவாவதைத் தடுக்கும் வகையில் ஓடைகள், தண்ணீா் தேங்கியுள்ள பகுதிகளில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
மாநகராட்சி முழுவதும் கொசுக்களே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
பின்னா் அப்பகுதியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை பாா்வையிட்ட அவா் பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், உதவி செயற்பொறியாளா் எம்.ஆா்.சிபிசக்கரவா்த்தி, உதவி பொறியாளா் ரவிசந்திரன், சுகாதார ஆய்வாளா் சரவணன் ஆகியோா் உடன் சென்றனா்.