முகப்பு
சேலம்

சிறுமி கா்ப்பம்: போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கா்ப்பமடைந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

வாழப்பாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கா்ப்பமடைந்துள்ளது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியின் 18 வயது மகள் லேசான மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளாா். அச்சிறுமிக்கு வியாழக்கிழமை உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் அழைத்துச் சென்றனா்.

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவா்கள் 5 மாத கா்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தனா்.இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.