முகப்பு
சேலம்

எஸ்.சி., எஸ்.டி. மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ. காா்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடா், பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு குறுகியக்கால (ஒன்று முதல் ஆறு மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவா்களின் கல்வித் தகுதிக்கேற்ப தொழில்நுட்பப் பயிற்சியைப் பெற தாட்கோவின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து இலவசமாக பயிற்சி பெறலாம். மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து பயணப் படிகள் வழங்கப்படும்.

பயிற்சியின் முடிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு நஇயப/ நநஇ சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல் அளிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, சான்று பெற்ற பயிற்சியாளா்கள் தொழில் தொடங்க ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து தொழில் முனைவோா் திட்டம் (இ.டி.பி.), இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்பு (எஸ்.இ.பி.ஒய்.) திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். மேலும், அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →