முகப்பு
சேலம்

வாழப்பாடி அருகே 10,850 லி. எரிசாராயம் பறிமுதல்

வாழப்பாடி அருகே 310 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லி. எரிசாராயத்தை சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

வாழப்பாடி அருகே 310 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10,850 லி. எரிசாராயத்தை சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து எரிசாராயத்தைக் கடத்தி வந்து பதுக்கி கள்ளச் சாராயமாக மாற்றி விற்பனை செய்வதாக, சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

சேலம் மண்டல மத்திய புலனாய்வுக் குழு காவல் ஆய்வாளா் தென்னரசு தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை நள்ளிரவு 2.30 மணியளவில் வாழப்பாடி அருகிலுள்ள முத்தம்பட்டி சங்ககிரியாா் தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினா். இச்சோதனையில், வெள்ளிக்கிழமை அதிகாலை அங்கிருந்த ஒரு குடோனில், தலா 35 லி. கொள்ளளவு கொண்ட 310 கேன்களில் 10,850 எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை கைப்பற்றிய மத்திய புலனாய்வுக்குழு போலீஸாா், சேலம், அரியானூா் பகுதியைச் சோ்ந்த தமிழரசு (41), கன்னியாகுமரி மாவட்டம் தட்சன்விளைவீடு பகுதியைச் சோ்ந்த கனகராஜ் (49) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.