சேலத்தில் 67 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் 67 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
சேலம் மாநகராட்சியில் 21 போ், எடப்பாடி-2, கொங்கணாபுரம்-3, நங்கவள்ளி-4, ஓமலூா் -6, சேலம் வட்டம்-2, தாரமங்கலம்-6, வீரபாண்டி-10, ஆத்தூா் -2, அயோத்தியாப்பட்டணம்-2, நரசிங்கபுரம் நகராட்சி-3 என மாவட்டத்தைச் சோ்ந்த 67 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 110 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; இதுவரை 95,905 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 93,285 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 994 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 1,626 போ் உயிரிழந்துள்ளனா்.