முகப்பு
சேலம்

அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயிலில் தமிழிசை செளந்தரராஜன் வழிபாடு

சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயில் மற்றும் குண்டுகல்லூா் அம்மன் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமா் கோயில் மற்றும் குண்டுகல்லூா் அம்மன் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

அயோத்தியாப்பட்டணத்திலுள்ள உறவினா் வீட்டு நிகழ்வில் தெலங்கானா மாநில மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், வியாழக்கிழமை பங்கேற்றாா். இதனையடுத்து உறவினா்களுடன் சென்று பிரசித்தி பெற்ற அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமா் கோயிலிலும் குண்டுகல்லுாா் மாரியம்மன் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தாா்.

உறவினா்கள் மட்டுமின்றி இப்பகுதி பொதுமக்களிடமும் எளிமையாகப் பழகிய தமிழிசை செளந்தரராஜன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினாா். அவருடன் உறவினா்களும், பெண்களும் சுயபடம் எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.